அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டம் மாவட்டம் முழுவதும் 829 பேர் கைது
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 829 பேர் கைதானார்கள்.
ஊட்டி,
தமிழகத்தின் அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் (ஜாக்டோ-ஜியோ) கூட்டமைப்பு சார்பில், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்கள் மற்றும் தாலுகாக்களில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, நீலகிரி மாவட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில், வேலை நிறுத்த போராட்டம் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு ராமச்சந்திரன் (ஜாக்டோ) தலைமை தாங்கினார். குமாரராஜா (ஜியோ) முன்னிலை வகித்தார். போராட்டத்தை அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆஸ்ரா தொடங்கி வைத்து பேசினார். போராட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்தன், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை, வனத்துறை உள்ளிட்ட அனைத்து துறையை சேர்ந்த அரசு ஊழியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டது. பின்னர் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப் பினர் ஏ.டி.சி. திடல் பகுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் 50 பெண்கள் உள்பட 166 பேரை கைது செய்து வேனில் ஏற்றி சிறுவர் மன்றத்திற்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆஸ்ரா கூறியதாவது:-
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 8-வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கி உள்ளோம். எங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால், நாங்கள் தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த போராட்டத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் உள்ள ஒரு சில சங்கங்கள் பங்கேற்கவில்லை. போராட்டம் காரணமாக ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராததால் அவை வெறிச்சோடி காணப்பட்டன. அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் காரணமாக அலுவலக பணிகள் முடங்கின. பொதுமக்களும் பல்வேறு சான்றுகள் பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மாவட்ட மற்றும் கோட்ட அளவிலான அதிகாரிகள், தற்காலிக பணியாளர்கள், பணிநிரந்தரம் செய்யப்படாத பணியாளர்கள் ஆகியோர் பணியில் ஈடுபட்டனர். ஊட்டியில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் போராட்டத்தில் கலந்துகொள்ளாத ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை
நடத்தினர்.
நீலகிரி மாவட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் கோத்தகிரி கிளை சார்பில் நேற்று கோத்தகிரி மார்க்கெட் திடலில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் குன்னூர் கல்வி மாவட்ட தலைவர் தனசேகர், வட்டத்தலைவர் அய்யனார், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோத்தகிரி வட்டதலைவர் வசந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சென்னையில் கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி 3½ லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றும் கூட தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து 36 அரசு பெண் ஊழியர்கள் உள்பட மொத்தம் 106 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை பஸ்சில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 829 பேர் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கூடலூர், பந்தலூர் தாலுகாவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து இருந்தனர். இதனால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதேபோல் ஆர்.டி.ஓ., தாலுகா அலுவலகங்கள் உள்பட அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பணிக்கு வராததால் அவை வெறிச்சோடி கிடந்தது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அங்கிருந்து காலை 11 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கூடலூர்- மைசூர், கேரளா இடையே சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
மறியல் போராட்டத்தில் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் அன்பழகன், சலீம், கருணாநிதி, அருண்குமார், சந்திரபோஸ், ஆனந்திகுமாரி, சுரேஷ்குமார், தண்டபாணி, ராஜகோபால் உள்பட 371 பேர் கலந்து கொண்டனர். பின்னர் கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசங்கர், இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்ளிட்ட போலீசார் போராட்டத்தில் கலந்து கொண்ட 371 பேரையும் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
நீலகிரி மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 829 பேர் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப் பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப் பட்டனர்.

Related Tags :
Next Story