மடத்துக்குளம் அருகே கூலித்தொழிலாளி அடித்துக்கொலை தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது
மடத்துக்குளம் அருகே கூலித்தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை-மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மடத்துக்குளம்,
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த ருத்ராபாளையம் புதுநகரை சேர்ந்த தண்டபாணியின் மகன் மாரிமுத்து (வயது 35). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மாரியம்மாள்(30) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவசர தேவைக்காக, அதே பகுதியில் வசிக்கும் மாரியம்மாளின் மாமா வாய்க்கால்துரை(48) என்பவரிடம், வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து மாரிமுத்து ரூ.5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். சில நாட்களுக்கு பின்னர் ரூ.5 ஆயிரத்தை கொடுத்துவிட்டு, அடமானம் வைத்த பத்திரத்தை மாரிமுத்து கேட்டுள்ளார். ஆனால் வீட்டு பத்திரத்தை வாய்க்கால்துரை தர மறுத்து இழுத்தடித்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி வாய்க்கால்துரையின் வீட்டுக்கு சென்ற மாரிமுத்து, அவரிடம் தனது வீட்டு பத்திரத்தை கொடுக்கும்படி கேட்டுள்ளார். அப்போது, அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த வாய்க்கால்துரையும், அவருடைய மகன் ரமேஷ்குமார் (25) மற்றும் ரமேஷ்குமாரின் நண்பனான 18 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் மாரிமுத்துவை மரக்கட்டையால் அடித்துள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய உறவினர்கள், மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 5-ந் தேதி மாரிமுத்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் குமரலிங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாய்க்கால்துரை, ரமேஷ்குமார் மற்றும் ரமேஷ்குமாரின் நண்பன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் 3 பேரும் உடுமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில், தந்தையும், மகனும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவன் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.

Related Tags :
Next Story