மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் பா.ஜனதா இறங்கியுள்ளது
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் பா.ஜனதா இறங்கியுள்ளதாக சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு,
முதல்–மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
மங்களூருவில் பா.ஜனதாவினருக்கு போராட்டம் நடத்த இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தை விட்டு வேறு இடங்களில் அவர்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இது சரியல்ல. மோட்டார் சைக்கிள் பேரணி மூலம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் பா.ஜனதா இறங்கியுள்ளது. இதை நாங்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம்.மங்களூருவில் பேரணி நடத்துவதாக பா.ஜனதா கூறி இருந்தால் அதற்கு நாங்கள் அனுமதி கொடுத்து இருப்போம். உரிய அனுமதியை பெற்று அவர்கள் பேரணி நடத்த வேண்டும். கவுரி லங்கேஷ், தனது பத்திரிகையில் சங்பரிவார் அமைப்புகள் பற்றி தரக்குறைவாக எழுதி இருக்காவிட்டால் அவர் கொல்லப்பட்டு இருக்க மாட்டார் என்று பா.ஜனதாவை சேர்ந்த ஜீவராஜ் எம்.எல்.ஏ. கூறி இருக்கிறார்.
இதன் அர்த்தம் என்ன?, இதில் இருந்து கொலையாளிகள் யார் என்பது புரியவில்லையா?. அடுத்த ஆண்டு(2018) சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று ஒரு அமைப்பு கருத்து கணிப்பு நடத்தி வெளியிட்டது. அதில் காங்கிரஸ் மீண்டும் அதிக பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டது.மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் பா.ஜனதா ஒரு அமைப்பின் பெயரில் மற்றொரு கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story