கோவில்பட்டி, திருச்செந்தூரில் 2–வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி, திருச்செந்தூரில் 2–வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு பதிலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 8–வது ஊதிய
கோவில்பட்டி,
கோவில்பட்டி, திருச்செந்தூரில் 2–வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு பதிலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 8–வது ஊதிய மாற்றத்தை உடனே அமல்படுத்த வேண்டும். அதுவரையிலும் 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ– ஜியோ அமைப்பு சார்பில், நேற்று முன்தினம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.
கோவில்பட்டிநேற்று 2–வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து கோவில்பட்டி பயணியர் விடுதி வளாகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ராஜ்குமார், மாவட்ட இணை செயலாளர் சின்னதம்பி, துணை தலைவர் ஜெகநாதன், வட்டார செயலாளர் பார்த்தசாரதி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்பட நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்திருச்செந்தூர் யூனியன் அலுவலகம் முன்பு நேற்று 2–வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கலையரசன், செயலாளர் வெங்கடேசன், கல்லூரி ஆசிரியர் கழகம் பசுங்கிளி பாண்டியன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வெள்ளைச்சாமி, மேல்நிலை உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வில்பர்ட், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பவுல் ஆபிரகாம், வருவாய் துறை அலுவலர் சங்கம் செந்தூர்ராஜன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சுடலை, சத்துணவு ஊழியர் சங்கம் பொன்சேகர் உள்பட நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.