தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது ஆர். நல்லக்கண்ணு பேட்டி


தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது ஆர். நல்லக்கண்ணு பேட்டி
x
தினத்தந்தி 9 Sept 2017 4:45 AM IST (Updated: 8 Sept 2017 9:55 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து விசயத்திலும் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆல். நல்லகண்ணு கூறினார்.

சிவகங்கை,

இந்திய கம்யூனிஸ்டு கடசியின் தேசிய குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான ஆர். நல்லக்கண்ணு சிவகங்கையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

 தமிழகத்தில் நீட் தேர்வை தடை செய்யக்கோரி நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை அரசியலாக பார்க்கக்கூடாது. நீட் தேர்வு ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரானது. மத்திய அரசு, மாநில அரசின் உரிமைகளில் தலையிடவோ, தடுக்கவோ கூடாது.

பெங்களூருவில் பத்திரிக்கையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கண்டனத்திற்கு உரியது. இந்த சம்பவத்தில் சம்பந்தவபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில் உரிய காலத்தில் தண்ணீர் தராததால் தமிழகத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் பாதிப்பு ஏற்பட்டுஉள்ளது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் பதிவு செய்தும் கர்நாடக அரசை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது. தமிழக மீனவர்களின் உரிமையை பாதுகாக்கவும், கச்சத்தீவு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விசயத்திலும் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது.

தமிழகத்திற்கு தற்போது நெருக்கடி அதிகமாக உள்ளது. இந்நிலையில் நிலையான அரசு இருக்க வேண்டும். ஆனால் தற்போது அதற்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் குணசேகரன், நகர செயலாளர் ராஜேஷ்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story