தாராபுரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


தாராபுரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2017 4:30 AM IST (Updated: 9 Sept 2017 12:11 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் நகராட்சி முன்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக, திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாராபுரம்,

தாராபுரம் நகராட்சி முன்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக, திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அப்துல்கய்யூம் தலைமை தாங்கினார். நகர பொறுப்பாளர் சாதிக்பாட்ஷா முன்னிலை வகித்தார். மாநில தலைமை கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது மியான்மரில் முஸ்லிம்கள் படுகொலை செய்வதை தடுக்க வேண்டும், உலக நாடுகள் மியான்மரை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும். இந்தியா தனது தூதரக உறவுகளை துண்டிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள்.


Next Story