திருவாரூரில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
மன்னார்குடியில் மணல் கொள்ளையை தடுத்த வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும்.
திருவாரூர்,
அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து திருவாரூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் மணிகண்ணன் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் கண்ணன், வக்கீல்கள் சதாசிவம், மணிவண்ணன், லெனின், தினேஷ், குமாஸ்தா சங்க நிர்வாகி கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாணவி அனிதா மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு ஏற்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப் பட்டன. வக்கீல்கள் போராட்டத்தினால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன.

Related Tags :
Next Story