நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி 13 ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி வருகிற 13-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருச்சி பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசினார்.
திருச்சி,
திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;-
இந்த கண்டன பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுமா? என்ற கேள்வி கனைகள் மாலை 5 மணி முதல் தொலைக்காட்சிகளில் செய்திகளாக வெளி வந்து கொண்டு இருந்தன. அப்போது நான் தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு காரில் வந்து கொண்டு இருந்தேன். தமது தோழமை கட்சி தோழர்கள் திருமாவளவன் சென்னையில் இருந்து வந்து கொண்டு இருந்தார். ஆசிரியர் வீரமணி திருத்துறைப்பூண்டியில் இருந்து வந்து கொண்டு இருந்தார். பொது உடைமை இயக்க தலைவர்கள் திருச்சியிலேயே முகாமிட்டு இருந்தார்கள். அவர்கள் என்னிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு கூட்டத்தை நடத்த முடியுமா? என கேட்டார்கள்.
நான் திருச்சிக்கு வந்து சேர்ந்ததும், தோழமை கட்சி தலைவர்களுடன் கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பற்றி கலந்து ஆலோசித்து கொண்டு இருந்தேன். அப்போது திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் துணிச்சலாக வந்து எங்களை சந்தித்தார். 8.9.2017 பொதுக்கூட்டம் நடத்துவதற்கு திருச்சி மாநகர காவல் துறை ஏற்கனவே வழங்கி இருந்த அனுமதி ரத்து செய்து விட்டோம். நீட் தேர்வுக்கு எதிராக எந்த ஒரு போராட்டமும், நடத்த அனுமதிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருப்பதால் நீங்கள் பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது. மீறி நடத்தினால் அது நீதி மன்ற அவமதிப்பாக கருதப்படும் என கூறி ஒரு சர்க்குலரை எங்களிடம் கொடுத்தார்.
அப்போது நான் அவரிடம் உச்ச நீதிமன்றம் உண்மையிலேயே இப்படி ஒரு தீர்ப்பை கூறியிருந்தாலும, நாங்கள் அதை மீறுவது என முடிவு செய்து விட்டோம் என்று கூறினேன். இதற்கு இடையில் சென்னையிலும், டெல்லியிலும் தமது இயக்கத்தின் மூத்த வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் என்னதான் கூறப்பட்டு இருந்ததை விளக்கமாக கூறினார்கள்.
அதில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தடை என்று எதுவும் இல்லை. நீட் தேர்வுக்கு எதிராக மாநிலத்தில் போராட்டங்கள் நடந்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்து இருப்பதாக கூறினார்கள். இது தான் உண்மை நிலை. ஆனால் திருச்சி மாநகர காவல் துறை பொதுக்கூட்டத்திற்கு தடை என சர்க்குலர் கொடுத்ததற்கு காரணம் என்ன தெரியுமா? பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் இந்த கூட்டத்தை நடத்த விடக்கூடாது என புகார் கொடுத்ததுதான்.
மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசின் சதி வலைகளை உடைத்து சுக்கு நூறாக்கி இந்த பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடந்து கொண்டு இருக்கிறது. நிச்சயமாக அனிதாவின் எண்ணம் ஈடேரும். வரக்கூடிய காலக்கட்டங்களில் அனிதாவின் எண்ணம் நிறைவேற்றப்படும். அடுத்த கட்ட போராட்டம் பற்றி அறிவிக்கப்பட இருப்பதை கேட்பதற்காக ஏராளமானவர்கள் திரண்டு இருக்கிறீர்கள். சமூக நீதிக்கு எதிராக நீட் தேர்வு என்ற பெயரில் விடப்பட்ட சவாலை எதிர்த்து, மாநில உரிமைகள் பறிக்கப்படுவது, நசுக்கப்படுவதை எதிர்த்து இந்த கூட்டம் நடத்தப்படுவது வெற்றி அடைந்து இருக்கிறது.
நீட் தேர்விற்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். அடுத்த கட்ட போராட்டம் பற்றி திருச்சியில் அறிவிப்போம் என பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி இருந்தோம். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் ஒரு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் அனைத்து கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி வருகிற 13-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இன்னும் ஓரிரு நாளில் உச்சநீதிமன்ற தீர்ப்பு விவரம் கிடைத்த பின்னர் அடுத்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Tags :
Next Story