‘நீட்’ தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: அரியலூர் அரசு கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை


‘நீட்’ தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: அரியலூர் அரசு கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை
x
தினத்தந்தி 9 Sept 2017 4:15 AM IST (Updated: 9 Sept 2017 3:10 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அரியலூர் அரசு கலைக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தாமரைக்குளம்,

நீட் தேர்வினால் மருத்துவப்படிப்பில் சேர முடியாமல் அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா கடந்த 1-ந்தேதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழக மாணவ, மாணவிகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரியும், மாநில அரசின் கல்வி உரிமையை பறிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது என்பதை வலியுறுத்தியும் கடந்த 4-ந்தேதியிலிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கடந்த 6-ந்தேதியிலிருந்து தொடர்ந்து 3 நாட்கள் கல்லூரிக்கு விடுமுறை அளித்து நிர்வாகம் அறிவித்தது.
காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு

கட்டுப்படுத்தவில்லை. மாறாக கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 5-வது நாளாக, நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்து கூறி மத்திய-மாநில அரசுகளை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வர் சிற்றரசு மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டனர். இதன் காரணமாக அரியலூர் அரசு கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளித்தும், கல்லூரி திறக்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என கல்லூரி முதல்வர் சிற்றரசு அறிவித்தார். இது குறித்த தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.

எனினும் மாணவர்கள் தொடர்ந்து அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும் அங்கு வந்து பங்கேற்றனர். பின்னர் மாணவர்கள் மதியம் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.

நீட் தேர்வுக்கு எதிராக எவ்வித போராட்டத்திலும் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாகவும், நீட் விவகாரத்தில் தீர்க்கமான முடிவு கிடைக்கும் என அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி மற்றும் போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துவிட்டு கலைந்து சென்றனர். எனினும் அங்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story