அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த அண்ணன்-தம்பியின் மனைவிகள் பலி
ஜெயங்கொண்டம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த அண்ணன்-தம்பியின் மனைவிகள் பரிதாபமாக இறந்தனர்.
வாரியங்காவல்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை மனைவி சரஸ்வதி (வயது 65). அதே ஊரைச் சேர்ந்த கணேசன் மனைவி தங்கம் (55). சாமிதுரையும், கணேசனும் அண்ணன்-தம்பிகள். நேற்று தங்கமும், சரஸ்வதியும் அருகில் உள்ள முந்திரிக்காட்டுக்கு தங்கள் ஆடுகளை மேய்ப்பதற்காக ஓட்டிச் சென்றனர்.
அப்போது அங்கு மின்கம்பி கீழே அறுந்து கிடப்பதை கவனிக்காமல், இருவரும் பேசிக்கொண்டே எதிர்பாராதவிதமாக மின்கம்பியை மிதித்து விட்டனர். இதில் தங்கம், சரஸ்வதி ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் சுருண்டு கீழே விழுந்தனர். இதில் உடல் கருகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கம், சரஸ்வதி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக அரியலூர் மாவட்ட பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றுடன் மழை பெய்ததால் மின்கம்பி அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் மின்கம்பி அறுந்து கிடந்தது குறித்து மின்வாரிய அதிகாரிகளும் துறைரீதியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story