‘பிராமணர்’ என்று கூறி விஞ்ஞானியை ஏமாற்றிய சமையல்கார பெண் மீது வழக்குப்பதிவு
கர்நாடக மாநிலம் புனே சின்காட் பகுதியை சேர்ந்த பெண் மேதா கோலே. வானிலை ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார்.
புனே,
மராட்டிய மாநிலம் புனே சின்காட் பகுதியை சேர்ந்த பெண் மேதா கோலே. வானிலை ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வரும் இவர், பண்டிகை காலங்களில் தன்னுடைய வீட்டில் சமையல் வேலை செய்ய ஒரு பிராமண வகுப்பை சேர்ந்த பெண் தேவை என்று செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தார். இதைத்தொடர்ந்து, நிர்மலா குல்கர்னி என்ற பெண் மேதா கோலேயை அணுகி சமையல் வேலை செய்ய முன்வந்தார்.
அதன்பின்னர், பண்டிகை காலங்களில் தொடர்ச்சியாக மேதா கோலேயின் வீட்டுக்கு சென்று சமையல் வேலை செய்தார். இந்த நிலையில், திடீரென ஒரு நாள் நிர்மலா குல்கர்னியின் வீட்டுக்கு மேதா கோலே சென்றார். அப்போது, அவர் பிராமணர் இல்லை என்பதும், பிராமண பெண்ணை போல் நடித்து தன்னுடைய வீட்டில் வேலை செய்து வந்து ஏமாற்றியதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
அவரது செயலால் தன்னுடைய மத உணர்வு புண்பட்டுவிட்டதாக கூறி உள்ளூர் போலீசில் மேதா கோலே புகார் செய்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story