அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பணிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கருவூலம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொது சுகாதாரதுறை உள்ளிட்ட அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
தாலுகா அலுவலகங்களில் ஊழியர்கள் இல்லாததால் பல்வேறு தேவைக்காக வந்த பொதுமக்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் சென்றனர். இதேபோல் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாத காரணத்தினால் பெரும்பாலான பள்ளிகளில் பகுதிநேர, தொகுப்பூதிய மற்றும் சிறப்பாசிரியர் களை கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது. சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு நேற்று காலை ஏராளமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜாக்டோ - ஜியோ அமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினர் கோவிந்தன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினர் கோவிந்தன் கூறும் போது, “தமிழகம் முழுவதும் 12 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் அறிவித்த பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
எங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக உயர்மட்ட நிர்வாகிகளை அழைத்து அரசு பேச வேண்டும். கோர்ட்டு உத்தரவை சட்டப்படி சந்திப்போம். வருகிற 10-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) சென்னையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்‘ என்றார்.

Related Tags :
Next Story