நாடு கடத்தல் ஒப்பந்தத்தால் தூக்கு தண்டனையில் இருந்து தப்பிய அபுசலீம்
மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் தாதா அபுசலீம்.
மும்பை,
மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் தாதா அபுசலீம். இவர் குண்டுவெடிப்பிற்கான ஆயுதங்கள் மற்றும் கையெறி குண்டுகளை குஜராத்தில் இருந்து ராய்காட்டிற்கு கொண்டு வந்தவர்.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பிறகு அபுசலீம் போர்ச்சுகல் நாட்டிற்கு தப்பிச்சென்றார். மேலும் அந்த நாட்டின் குடியுரிமையை பெற்றார். இந்தநிலையில் 2002-ம் ஆண்டு அபுசலீம் போர்ச்சுகலில் சர்வதேச போலீசாரால் கைது செய்யப்பட்டார். எனினும் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்தி கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. போர்ச்சுகல் நாட்டின் சட்டப்படி குற்றவாளிக்கு மரண தண்டனையோ, 25 ஆண்டுகளுக்கு மேல் ஜெயில் தண்டனையோ கொடுக்க முடியாது. எனவே அபுசலீமிற்கு மரணதண்டனை, 25 ஆண்டுகளுக்கு மேல் ஜெயில் தண்டனை கொடுக்க மாட்டோம் என உத்தரவாதம் அளித்தால் மட்டுமே அவரை இந்திய நாட்டிற்கு அனுப்ப முடியும் என போர்ச்சுகல் சுப்ரீம் கோர்ட்டு கூறியது.
இதையடுத்து அந்த நிபந்தனையை ஏற்று இந்திய அரசு அபுசலீமை இங்கு கொண்டு வந்தது. எனவே தான் மும்பை குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியான அபுசலீம் தூக்கு தண்டனையில் இருந்து தப்பியதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story