மராட்டிய நீர்ப்பாசன திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.60 ஆயிரம் கோடி நிதி
மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று மும்பையில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மும்பை,
மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று மும்பையில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், நிருபர்களை சந்தித்த அவர், ‘‘நதிகள் இணைப்பு மற்றும் நீர்ப்பாசன திட்டங்களுக்காக அடுத்த 2 ஆண்டுகளில் மாநில அரசுக்கு மத்திய அரசு ரூ.60 ஆயிரம் கோடி நிதி அளிக்கும்’’ என்று உறுதியளித்தார்.
மேலும் நர்–பார்–தபி– நர்மதா ஆகிய நதிகளின் நீரை பங்கீடு செய்வதில் மராட்டியத்துக்கும், குஜராத்துக்கும் இடையே நிலவும் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று கூறிய அவர், இதையொட்டி அடுத்த வாரம் இரண்டு மாநிலங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றார்.
Related Tags :
Next Story