தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை வீடு கட்டும் பணி பாதியில் நின்றதால் பரிதாபம்


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை வீடு கட்டும் பணி பாதியில் நின்றதால் பரிதாபம்
x
தினத்தந்தி 9 Sept 2017 4:31 AM IST (Updated: 9 Sept 2017 4:31 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளிச்சந்தை அருகே வீடு கட்டும் பணி பாதியில் நின்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ராஜாக்கமங்கலம்,

வெள்ளிச்சந்தை அருகே ஈசன்தங்கு பகுதியை சேர்ந்தவர் பாலகோபால கிருஷ்ணன். இவரது மகன் கிருஷ்ணராஜ் (வயது29), கட்டிட தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

கிருஷ்ணராஜ் சொந்தமாக வீடு கட்டி வந்தார். கட்டுமான பணிகள் தொடங்கிய நிலையில், தொடர்ந்து வேலை செய்ய பணம் இல்லை. பலரிடம் உதவி கேட்டும் போதிய பணம் கிடைக்கவில்லை. இதனால் வீடு கட்டும் பணி பாதியில் நின்றது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணராஜ் தனது அறையில் தூங்க சென்றார். நேற்று அதிகாலையில் அவரது தாயார் வீட்டின் வெளியே வந்த போது, மரத்தில் கிருஷ்ணராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். வீட்டை கட்டி முடிக்க பணம் இல்லாததால் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story