மதுவுக்கு ஆசைப்பட்டு மனைவியை எதிர்வீட்டுக்காரருக்கு விருந்தாக்கிய வாலிபர் ஆபாச படம் எடுத்தும் மிரட்டல்
மதுவுக்கு ஆசைப்பட்டு மனைவியை எதிர்வீட்டுக்காரரின் இச்சைக்கு அவருடைய கணவரே இணங்க வைத்த கொடுமை நேர்ந்துள்ளது. இதுபற்றி அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நாகர்கோவில்,
நாகர்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த திருமணமான 23 வயது இளம்பெண் அவர். அவருக்கு ஒரு கைக்குழந்தையும் உள்ளது. அவருடைய கணவருக்கு வயது 28. இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியுள்ளார். மது போதைக்கும் அடிமையாகிவிட்டார்.
இதனால் அந்த பெண்ணின் குடும்பம் வறுமையில் வாடியது. இதை அவர்களது எதிர்வீட்டைச் சேர்ந்தவர் பயன்படுத்தி, அந்த பெண்ணின் கணவரை அழைத்துச் சென்று மதுபானம் வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர் நைசாக அவரிடம் பேசி, “உனது மனைவியை எனக்கு விருந்தாக்கினால் நீ கேட்கும் போது எல்லாம் மது பானங்கள் வாங்கித் தருகிறேன்” என்று கூறி இருக்கிறார்.
அந்த வாலிபர் மதுவுக்கு ஆசைப்பட்டு அதற்கும் சம்மதம் தெரிவித்து தனது மனைவியை அடித்து துன்புறுத்தி எதிர் வீட்டுக்காரரின் இச்சைக்கு இணங்கச் செய்திருக்கிறார்.
இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், அந்த பெண்ணுடன் இருந்ததை வீடியோ படமும் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ படத்தை அந்த பெண்ணிடம் காண்பித்து மிரட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், இதற்கு அந்த பெண்ணின் கணவரும் உடந்தையாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அந்த பெண், தனது கைக்குழந்தையுடன் நாகர்கோவிலில் உள்ள தன்னுடைய சகோதரர் வீட்டுக்கு வந்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறி அழுதுள்ளார்.
இதை அறிந்த அந்த பெண்ணின் கணவர், எதிர்வீட்டுக்காரர் மற்றும் அவருடைய மனைவி ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் ஒரு காரில் நாகர்கோவில் வந்து இளம்பெண்ணை தங்களுடன் வரும்படி அழைத்ததாக தெரிகிறது. இளம்பெண் அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்கும், இளம்பெண்ணின் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் நாகர்கோவில் கோட்டார் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் காரை விட்டுவிட்டு அவர்கள் 3 பேரும் தப்பிச் சென்றுவிட்டனர். காரை போலீசார் கைப்பற்றினர்.
அதன்பின்பு போலீசார் நடத்திய விசாரணையில், பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து அந்த பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அது சம்பந்தமாக புகாரும் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story