நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி வக்கீல்கள் மறியல்
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி வக்கீல்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு கட்டிட நுழைவு வாயில் முன்பு நேற்று திருவள்ளூர் மாவட்ட அனைத்து வக்கீல்கள் சங்கங்களின் சார்பில் வக்கீல்கள் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரியும், மாணவி அனிதா மரணத்திற்கு நீதிகேட்டும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் திடீரென கோர்ட்டு எதிரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டன.
அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டத்தை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story