திருவள்ளூரில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூரில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று திருவள்ளூர் மாவட்ட ஜாக்டோ– ஜியோ அமைப்பு சார்பில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஒய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ–ஜியோ அமைப்பின் உயர் மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் தாஸ் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுடன் அரசு ஊழியர்களும் கலந்து கொண்டு பணியை புறக்கணித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story