ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு,
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஒய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 7–வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்து 8–வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும். என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவர்கள் கையில் மண்பானைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், பலகட்ட போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story