வாழைப்பழம் வழங்கும் நன்மைகள்


வாழைப்பழம் வழங்கும் நன்மைகள்
x
தினத்தந்தி 9 Sept 2017 12:26 PM IST (Updated: 9 Sept 2017 12:26 PM IST)
t-max-icont-min-icon

நாம் அதிகம் உண்ணும் பழம், வாழைப்பழம். அன்றாடம் வாழைப்பழம் உண்பது நல்ல வி‌ஷயம்தான். அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் நமக்கு நன்மை பயக்கும்.

வாழைப்பழத்தின் மேலும் பல நன்மை தரும் வி‌ஷயங்கள் பற்றிப் பார்ப்போம்...

* தினமும் இரவில் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து குடலில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தி, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

* உயர் ரத்த அழுத்தத்துக்குக் காரணமான சோடியத்தின் அளவைக் கட்டுப்படுத்தி, பக்கவாதம் மற்றும் ரத்தசோகைப் பிரச்சினை வராமல் வாழைப்பழம் தடுக்கிறது.

* இரைப்பை, வயிற்றில் அதிகம் சுரக்கும் அமிலத்தைக் கட்டுப்படுத்தி, நெஞ்செரிச்சல், செரிமானப் பிரச்சினை, வயிற்றுப்புண்களை குணமாக்குகிறது.

* உடலில் சக்தி, நீரிழப்பைத் தடுத்து, உடல் சோர்வைப் போக்கி, உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது.

* தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிடுவது, ஹீமோகுளோபின் எண்ணிக்கையையும் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்து ரத்தசோகை நோயைக் குணமாக்குகிறது.

* பசியைத் தூண்டும் நல்ல பாக்டீரியாக்களுக்கு வாழைப்பழம் நலம் பயத்து, செரிமான சக்தியைக் கூட்டுகிறது, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

* வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் மூலம் உண்டாகும் வயிற்றுப்புண்களைக் குணமாக்குவதுடன், வயிற்றைப் பாதிக்கும் நுண்ணுயிர்களை அழிக்கிறது.

Next Story