தனிமைத் தீவில் வசிக்கும் முதியவர்
ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ரெஸ்டொரேசன் ஐலண்ட் எனப்படும் தீவில் அவர் வசித்து வருகிறார்.
ஆஸ்திரேலியாவில் ஒரு தனிமைத் தீவில் 20 ஆண்டுகளாக யாருடைய உதவியும் இன்றி வாழ்ந்துவரும் முதியவர் ஒருவர் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
டேவிட் கிலெஷீன் என்ற அந்த 73 வயதான முதியவர், ஒரு காலத்தில் பணக்காரராக இருந்தபோதிலும் பங்குச்சந்தை சரிவின் காரணமாக சொத்துக்களை இழந்தவர் எனக் கூறப்படுகிறது.
1997–ம் ஆண்டு இந்தத் தீவுக்கு ஒரு நாய்க்குட்டியுடன் வந்து குடியேறியிருக்கிறார் டேவிட். இங்கு தனக்குத் தேவையான உணவுகளை தானே தயாரித்து, உண்டு வாழ்ந்து வருகிறார்.
தனது தனிமை வாசம் குறித்து முதியவர் டேவிட் கூறுகையில், “இங்கு விஷப் பாம்புகளும், ஆபத்தான பூச்சியினங்களும், ராட்சத முதலைகளும் காணப்படுகின்றன. ஆனால் உலகின் வேறு இடங்களில் நிகழும் பயங்கரவாதத் தாக்குதல்கள் போன்று இவை ஆபத்தை விளைவிக்கக் கூடியவை அல்ல.
நாம் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ வேண்டும். இங்கே எனக்கு பாதுகாப்பு உள்ளதாக நான் கருதுகிறேன். அதனால் இந்த இயற்கையை நான் பெரிதும் நேசிக்கிறேன். எனக்கு ஆபத்து ஏற்படாது என்ற நம்பிக்கையுடன் நான் தினமும் உறக்கத்துக்குச் செல்கிறேன்” என்றார்.
இந்தத் தீவு தனிமையானது, பாலைவனம் போன்றது என்பதால் இங்கிருந்து சென்றுவிடுமாறு அதிகாரிகள் முதியவரிடம் கூறியிருக்கிறார்கள்.
ஆனால், தனது மரணம் இங்கேயே நிகழ வேண்டும் என்றும், இந்த உலகத்தின் சொர்க்கமே இந்தத் தீவுதான் என்றும் கூறும் டேவிட் தொடர்ந்து அங்கேயே வசித்து வருகிறார்.
தனிமையில் இனிமை காண்பவர்!
Related Tags :
Next Story