பூமி சந்தித்த மிகப் பெரிய விண்கல் தாக்குதல்
விண்கல் தாக்குதலால், சுமார் 18 மாத காலம் பூமி இருளில் மூழ்கி இருந்திருக்கிறது.
பூமி மீது விண்கல் தாக்குதல் அபாயம் குறித்து அவ்வப்போது பரபரப்புச் செய்தி எழுந்து அடங்குகிறது. ஆனால் மிகப் பெரிய விண்கல் தாக்குதலை ஏற்கனவே பூமி சந்தித்துவிட்டது.
ஆம், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அந்த விண்கல் தாக்குதலால், சுமார் 18 மாத காலம் பூமி இருளில் மூழ்கி இருந்திருக்கிறது.
65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த மாபெரும் விண்கல் மோதலின் காரணமாக வளிமண்டலத்தில் வீசப்பட்ட துகள்கள் சுமார் 18 மாதங்கள் வரை பூமி மீது சூரிய ஒளி விழாமல் தடுத்துள்ளன.
அந்த விண்கல் தாக்குதலாலே டைனோசர் இனம் அழிந்தது என கூறப்படுகிறது. இதுவரை இதுதான் உலகம் கண்ட மிக மோசமான விண்கல் தாக்குதல் ஆகும்.
அந்த விண்கல் குறைந்தபட்சம் 10 கி.மீ. பரப்பளவை கொண்டதாய் இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. விஞ்ஞானிகளின் மதிப்பீட்டின்படி, டைனோசர் இனம் உட்பட அப்போது பூமியில் வாழ்ந்த 93 சதவீத பாலூட்டி இனங்களை அந்த ஒற்றை விண்கல் தாக்குதல் அழித்துவிட்டது.
Related Tags :
Next Story