குன்றத்தூர்-குமணன்சாவடி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


குன்றத்தூர்-குமணன்சாவடி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Sep 2017 10:30 PM GMT (Updated: 9 Sep 2017 9:04 PM GMT)

குன்றத்தூர்-குமணன்சாவடி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலையில் ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் அருகே சாலையின் ஒரு பகுதி மழை நீர் தேங்கி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் அந்த சாலை வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது.
இந்த சாலையின் ஒரு பகுதியில் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பழுதடைந்த சாலையை நெடுஞ்சாலைத்துறையினரும், நகராட்சி அதிகாரிகளும் சீரமைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். மேலும் இந்த சாலை சேதம் அடைந்து உள்ளதால் அதனை ஒட்டி உள்ள கடைகளும் மூடியே கிடக்கிறது.

ஆகவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story