நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Sept 2017 4:15 AM IST (Updated: 10 Sept 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்

மலைக்கோட்டை,

நீட் தேர்விற்கு எதிரான மாணவர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் திருச்சியில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று மதியம் சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சிந்தாமணி அண்ணா சிலைக்கு ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீஸ் சப்- இன்ஸ் பெக்டர் முகமது இப்ராஹிம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நீட் தேர்விற்கு எதிராக போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தக் கூடாது என்று கோர்ட்டு கூறிய உத்தரவை பின்பற்றும்படி மாணவர்களிடம் தெரிவித்தனர். அதன்பின் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாணவ, மாணவிகள் ஒரு சில நிமிடங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர்.


Next Story