தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் அமைச்சர் வழங்கினார்
தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா, சிறந்த தலைமை ஆசிரியர்கள்- ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ஆசிரியர் தின சிறப்பு மலர் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி வரவேற்று பேசினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், உதவி கலெக்டர் ராமமூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் சபியுல்லாகான், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு ஆசிரியர் தினவிழா சிறப்பு மலரை வெளியிட்டார். பின்னர் அவர் தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 2,211 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் பேசுகையில், மாணவ-மாணவிகளின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் தர்மபுரி மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் முன்னேற ஆசிரிய- ஆசிரியைகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இந்திய அளவில் 24.4 சதவீதம் பேர்தான் உயர்கல்வியை பயின்று வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் 44.3 சதவீதம் பேர் உயர்கல்வி பயில்கிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் மேல்நிலை கல்வியை முடித்தவர்களில் 96.6 சதவீதம் பேர் உயர்கல்வி பயில்கிறார்கள். தமிழக அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்கள் காரணமாகவும், புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டதன் காரணமாகவும் உயர்கல்வி துறை முன்னேற்றம் அடைந்துள்ளது என்று பேசினார்.விழாவில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சீனிவாசன், முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, பழனிச்சாமி, சிவப்பிரகாசம், ரவி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பூக்கடை ரவி, அனைவருக்கும் இடைநிலை கல்விதிட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் இலக்கியம்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பொன்முடி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story