வருகிற 12-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை காரைக்காலில் காவிரி மகாபுஷ்கரம் விழா கலெக்டர் ஆய்வு


வருகிற 12-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை காரைக்காலில் காவிரி மகாபுஷ்கரம் விழா கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 10 Sept 2017 4:00 AM IST (Updated: 10 Sept 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 12-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை காரைக்காலில் காவிரி மகாபுஷ்கரம் விழா கலெக்டர் கேசவன் நேரில் ஆய்வு

காரைக்கால்,

புதுச்சேரி அரசு சார்பில் காரைக்காலில் வருகிற 12-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ‘காவிரி மகாபுஷ்கரம்’ திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி காரைக்காலை சேர்ந்த திருநள்ளாறை அடுத்துள்ள அகலங்கண்ணு கிராமத்தில் காவிரியின் பிரதான கிளை நதியான அரசலாற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் விழா ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் கேசவன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இந்து அறநிலையத்துறை இணைந்து காவிரி மகாபுஷ்கரம் திருவிழாவின்போது பக்தர்கள் நீராடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக நிருபர்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை கலெக்டர் எஸ்.கே.பன்னீர் செல்வம், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் வி.சண்முகசுந்தரம், செயற் பொறியாளர் இளஞ்செழியன், உதவிப் பொறியாளர் வீரசெல்வம், நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரவி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story