ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாமில் குவிந்த பொதுமக்கள்
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாமில் பொதுமக்கள் குவிந்தனர்.
சேலம்,
தமிழ்நாடு முழுவதும் கடந்த 6-ந் தேதி முதல் வாகன ஓட்டுனர் அசல் உரிமத்தை கையில் வைத்திருப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இதுவரை ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருந்தவர்களும், 18 வயது பூர்த்தியான கல்லூரி மாணவ-மாணவிகளும் ஓட்டுனர் உரிமம் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று அரசு விடுமுறை நாளில், ஓட்டுனர் உரிமம் தொடர்பான சிறப்பு முகாம் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் நடந்தது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் சேலம் மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் தெற்கு, ஆத்தூர், சங்ககிரி, மேட்டூர் ஆகிய 6 வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் ஓட்டுனர் உரிமம் தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது.
சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிகாரி தாமோதரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கடேசன், செந்தில் ஆகியோர் பொதுமக்கள் கொடுத்த விண்ணப்பங்களை பரிசீலித்தனர்.
அதாவது முகவரி, வயது சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்த்தனர். ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.
அதாவது பழகுனர் உரிமம், புதிய ஓட்டுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், மாயமான ஓட்டுனர் உரிமத்திற்கு புதிய நகல் வழங்குதல், முகவரி மாற்றம் தொடர்பான பணி ஆகியவை நடந்தது. எல்.எல்.ஆர். முடிந்து ஒரு மாதம் ஆனவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணியும் நடந்தது.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கூறுகையில், “ஓட்டுனர் உரிமம் பெற 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். அத்துடன் 8-ம் வகுப்பு கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இருப்பிட முகவரி, வயது சான்று ஆகியவற்றை சரிபார்த்துதான் உரிமம் வழங்கப்படுகிறது. கடந்த 29-ந் தேதி முதல் 8-ந் தேதிவரை 1,284 பேர் ஓட்டுனர் உரிமத்திற்காக விண்ணப்பித்திருக்கிறார்கள். இன்று (அதாவது நேற்று) நடந்த ஒருநாள் சிறப்பு முகாமில் 212 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்“ என்றார்.
கடந்த மாதம் 29-ந் தேதி முதல் 8-ந் தேதிவரை மாவட்டம் முழுவதும் உள்ள 6 வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் 3,500 பேர் ஓட்டுனர் உரிமத்திற்காக விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story