‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி காந்திய மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்


‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி காந்திய மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Sept 2017 4:45 AM IST (Updated: 11 Sept 2017 1:50 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கக்கோரி காந்திய மக்கள் இயக்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை,

‘நீட்’ தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கக்கோரி தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று காந்திய மக்கள் இயக்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில செயலாளர் பூபதி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் 50–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, ‘நீட்’ தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்த அரியலூர் மாணவி அனிதாவின், தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பது ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.


Next Story