நவராத்தி விழாவையொட்டி கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி நாராயணசாமி திறந்து வைத்தார்
புதுச்சேரி பொம்மை உற்பத்தியாளர்கள் சேவை தொழிலியல் கூட்டுறவு சங்கம் சார்பில் கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.
புதுச்சேரி,
புதுச்சேரி பொம்மை உற்பத்தியாளர்கள் சேவை தொழிலியல் கூட்டுறவு சங்கம் சார்பில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.
புதுவை அம்பலத்தடையார் மடம் வீதியில் உள்ள செட்டியார் திருமண நிலையத்தில் நடந்த கண்காட்சியை முதல்–அமைச்சர் நாராயணசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து கொலு பொம்மைகளை பார்வையிட்டார். விழாவில் அமைச்சர் கந்தசாமி மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இக்கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை வருகிற 30–ந் தேதி வரை நடைபெறுகிறது.
Related Tags :
Next Story