டயர் வெடித்ததால் சாலை தடுப்பு சுவரில் கார் மோதியதில் வாலிபர் பலி


டயர் வெடித்ததால் சாலை தடுப்பு சுவரில் கார் மோதியதில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 11 Sept 2017 3:45 AM IST (Updated: 11 Sept 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

மங்களமேடு பஸ்நிலையம் அருகே டயர் வெடித்ததால் சாலை தடுப்பு சுவரில் கார் மோதியதில் வாலிபர் பலியானார்.

மங்களமேடு,

சென்னையில் உள்ள ஒரு கார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தவர் ராம்குமார் (வயது 27). இவர் திருச்சியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, அவருடன் வேலை பார்க்கும் நண்பர்கள் 4 பேருடன் காரில் சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்று கொண்டு இருந்தார்.

மங்களமேடு பஸ்நிலையம் அருகே வந்து கொண் டிருந்த போது திடீரென்று காரின் டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் ராம்குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

4 பேர் படுகாயம்

மேலும் காரில் இருந்த தரணிதரன் (28), ராஜேஷ் (27), குருசாமி (27) சதிஷ்குமார் (28) ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராம்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story