‘அமெரிக்காவின் தந்தை’ ஜார்ஜ் வாஷிங்டன்
உலக நாடுகளில் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னணி நாடாக விளங்குகிறது அமெரிக்கா.
அந்த நாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலியவர் ‘அமெரிக்காவின் தந்தை’ எனப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன். அவரைப் பற்றிய சுவாரசியங்கள் சில..
1. அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் பிறந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன். கல்வியில் சிறந்து விளங்கிய இவர் கணிதம், புவியியல், லத்தீன், ஆங்கிலம் கற்றார். 1753-ல் ராணுவத்தில் சேர்ந்த இவர் அப்போது நடந்த பிரெஞ்சுப் போர், சிவப்பிந்தியப் போரில் பங்கேற்றார். இது அவருக்கு ராணுவ அனுபவத்தோடு புகழையும் பெற்றுத் தந்தது.
2. கட்டான உடலமைப்பு, வசீகரத் தோற்றம் கொண்ட வாஷிங்டன் எதற்கும் அஞ்சாதவர். நிர்வாகத் திறன், மன உறுதி படைத்தவர். 1775-ல் அமெரிக்கப் புரட்சி ராணுவத்தின் தலைமைத் தளபதியாகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். ஏறக்குறைய 8 ஆண்டுகள் பிரிட்டனுடன் நடைபெற்ற அமெரிக்க சுதந்திரப் போர் 1783-ல் முடிந்தது. தன்னிகரில்லாத அர்ப் பணிப்பு உணர்வுடன் போரை நடத்தி வெற்றிக்குப் பெரும் பங்காற்றினார் ஜார்ஜ் வாஷிங்டன்.
3. அமெரிக்க சுதந்திரப் போரில் அவர் தலைமைப் பொறுப்பு ஏற்றது முதல், சுதந்திர அமெரிக்கா வின் அதிபராக 2 முறை பதவி வகித்த காலகட்டம் வரை இவரது சாதனைகள் மகத்தானவை. விடுதலைப் போர் முடிந்த பிறகு, அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் குழுவுக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
4. அமெரிக்க சுதந்தரப் போர் முடிவுக்கு வந்ததும் வாஷிங்டன் கூறியது... “நமக்கு முன்னால் ஒரு பெரிய கடமை காத்திருக்கிறது. நமக்காக ஒரு நாடு கிடைத்துவிட்டது. போரில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் ஒற்றுமையாகப் பெற்ற வெற்றி, மாபெரும் வெற்றி என்பதில் சந்தேகமில்லை. அந்த நம்பிக்கை எல்லா மக்களுக்கும் இருக்கிறது. அதே நம்பிக்கையை மக்களிடமிருந்து பெறவேண்டும் என்றால் எல்லா மாகாணங்களும் ஒன்றுபட்டு ஒரே அரசாக, அதே சமயம் மக்கள் அரசாக மாற வேண்டும்” என்றார்.
5.அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி, நவீன அமெரிக்கா உருவாகக் காரணமாக இருந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன். அவர் நாட்டின் தலைவராக, ஜனாதிபதியாக பொறுப்பேற்க வேண்டும் என்று எல்லோரும் விரும்பினார்கள். அனைவரின் விருப்பப்படி முதல் அதிபராகப் பதவி ஏற்ற அவர் நாட்டை நல்வழிப்படுத்த கடுமையாக உழைத்தார்.
6. வாஷிங்டன் எப்போதும் காலம் கருதிச் செயல்படுவார். நேரத்தை வீணாக்குவது அவருக்கு பிடிக்காது. எந்த ஒரு விழாவாக இருந்தாலும் குறித்த நேரத்துக்கு முன்பே சென்றுவிடுவார்.
7. அமெரிக்காவின் ஒற்றுமை குலையாமல் கட்டிக்காத்த உறுதிமிக்க தலைவராகத் திகழ்ந்தார். பல துறைகளிலும் அசாதாரண நிர்வாகத் திறனுடன் அமெரிக்காவைக் கட்டமைத்தார். போர், அமைதி என 2 காலகட்டங்களிலும் சிறப்பான நிர்வாகத் திறனைக் கொண்டிருந்ததால், காலங்கள் கடந்தும் புகழ்பெற்று விளங்குகிறார். இவரது சிலைகள் அமெரிக்காவில் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
8. டாலர் நோட்டுகள், நாணயங்களில் இவரது உருவம் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது நினைவாகத் தபால் தலைகள் வெளியிடப்பட்டன. பல கல்வி நிறுவனங்கள், பொது இடங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. ஜார்ஜ் வாஷிங்டன் தனது 67-வது வயதில் 1799-ம் ஆண்டு இறந்தார்.

Related Tags :
Next Story