திருச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
திருச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி,
தமிழகத்தில் ‘நீட்‘ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் அதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மதியம் 3 மணி முதல் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர்.
இரவிலும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மாணவர்களிடம் கே.கே.நகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து...
இதேபோல் அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய கோரியும் திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவ-மாணவிகள் கடந்த 4, 5-ந் தேதிகளில் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரிக்கு தொடர் விடுமுறை அளித்து நிர்வாகம் உத்தரவிட்டது. விடுமுறை முடிந்து நேற்று கல்லூரி திறக்கப்பட்டது.
இந்நிலையில் கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகளில் 20-க்கும் மேற்பட்டவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ‘நீட்’ தேர்வு விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நடத்தும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.

Related Tags :
Next Story