அரியலூர் மாவட்டங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தம்


அரியலூர் மாவட்டங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 12 Sept 2017 4:15 AM IST (Updated: 12 Sept 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டங்களில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும், ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும் மற்றும் மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவான ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆளவந்தார், ஆசிரியர் இயக்கங்களை சேர்ந்த கணேசன், அருள்ஜோதி மற்றும் தயாளன் , இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

அரியலூர்...

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர்கள் சங்க தலைவர் பஞ்சாபிகேசன் தலைமை தாங்கினார். இதில் அரியலூர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள், வருவாய், உள்ளாட்சி, சத்துணவு, சாலைப்பணியாளர்கள், பொது சுகாதாரத்துறையை சேர்ந்த அரசு ஊழியர்கள், தமிழக ஆசிரியர் மன்றம், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, முதுநிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story