கத்தியை காட்டி மிரட்டி பெண்களிடம் நகை பறித்த வாலிபர் கைது

பெத்தநாயக்கன்பாளையம்,
பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஓலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது 40). ஏத்தாப்பூர் பகுதியை சேர்ந்தவர் சுசிலா (28). இந்த 2 பெண்களும் கடந்த 5-ந் தேதி தங்கள் கிராம பகுதிகளில் நடந்து சென்ற போது, வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி வழிமறித்து அவர்கள் அணிந்திருந்த 7½ பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த சம்பவங்கள் குறித்து அந்த 2 பெண்களும் ஏத்தாப்பூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், நகை பறிப்பில் ஈடுபட்டது பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள வடுகத்தம்பட்டி மாரியம்மன் கோவில் பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் அருள்மணி(24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அருள்மணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து 7½ பவுன் நகையை போலீசார் மீட்டனர்.

Related Tags :
Next Story