அண்ணாநகரில் தொடர் திருட்டு: மோட்டார் சைக்கிள் திருடர்கள் 5 பேர் சிக்கினர்
அண்ணாநகர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 30 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
கோயம்பேடு,
சென்னை, அண்ணாநகர், திருமங்கலம், கோயம்பேடு, சிந்தாமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூங்காக்கள், வணிக வளாகங்கள், வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள வாகன நிறுத்தங்களில் நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போனது. இந்த சம்பவம் தொடர்ந்து நடந்து வந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.
இதுகுறித்து அண்ணாநகர் போலீசில் புகார்கள் குவிந்தன. இதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருடி வரும் கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் தீவிர விசாரணை நடத்திய போலீசார் தேவராஜ்(வயது36) ராஜ்குமார்(25), ராஜாராம்(24) உள்ளிட்ட 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிள்களை திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 30 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்று கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
* எழும்பூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ஒருவர் மின்சார ரெயிலில் அடிபட்டு இறந்தார். அவர் யார்? என போலீசார் விசாரிக்கிறார்கள்.
இதேப்போன்று திரிசூலம்- மீனம்பாக்கம் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற கலைபாபு(20) என்பவர் ரெயிலில் அடிபட்டு இறந்தார்.
* அரசால் தடை செய்யப்பட்ட மாவா குட்கா புகையிலை பொருட்களை புளியந்தோப்பு, பேசின் பாலம் பகுதிகளில் விற்பனை செய்ததாக சேகர்(33), முனுசாமி(27), ரவிச்சந்திரன்(52), சங்கர் என்பவரது மனைவி சின்னப்பூ(31) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ மாவாவை பறிமுதல் செய்தனர்.
* கொசஸ்தலை ஆற்றில் இருந்து மணலை திருடிக்கொண்டு செங்குன்றத்தை அடுத்து சாந்திநகரில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஆர்.டி.ஓ. தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று 10 யூனிட் மணலை கைப்பற்றி பொதுப்பணித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Related Tags :
Next Story