திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய லாரி


திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய லாரி
x
தினத்தந்தி 12 Sept 2017 11:47 AM IST (Updated: 12 Sept 2017 11:47 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு நேற்று ஒரு லாரி தேங்காய் மட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டு இருந்தது.

தாளவாடி,

 ராஜேந்திரன் (வயது 37) என்பவர் லாரியை ஓட்டினார். ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் 27-வது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது, எதிரே ஒரு கார் வந்தது. அதற்கு வழிவிட லாரியை டிரைவர் வளைத்தபோது நிலைதடுமாறி மலைப்பாதை ஓரத்தில் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது.

இதில் தடுப்புச்சுவர் அடியோடு இடிந்து கான்கிரீட் கம்பிகளின் பிடிப்பில் தொங்கியது. அதன்மேல் ஒருபுறமாக லாரியும் அந்தரத்தில் தொங்கியது. உடனே டிரைவர் வெளியே குதித்து தப்பிவிட்டார். தடுப்புச்சுவர் தாங்கி பிடிக்கவில்லை என்றால். சுமார் 300 அடி மலைச்சரிவில் லாரி உருண்டு இருக்கும். இந்த சம்பவம் மலைப்பாதை ஓரத்தில் நடந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.


Next Story