நீட் பிரச்சினையில் அரசியல் கட்சியினர் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும்


நீட் பிரச்சினையில் அரசியல் கட்சியினர் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும்
x
தினத்தந்தி 13 Sept 2017 6:15 AM IST (Updated: 13 Sept 2017 12:18 AM IST)
t-max-icont-min-icon

நீட் பிரச்சினையில் அரசியல் கட்சியினர் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் திருநாவுக்கரசர் சொல்கிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

நெல்லை மாவட்டம் தென்காசியில் நடந்த கூட்டத்தை முடித்துக்கொண்டு மதுரை நோக்கி வந்த காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நகர தலைவர் வன்னியராஜ் தலைமையிலான கட்சியினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

 அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த திருநாவுக்கரசர் கூறியதாவது:–

 நீட் தேர்வு பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும். அ.தி.மு.க.வில் அவரது கட்சியினரே குழப்பம் ஏற்படுத்தி, ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு கட்சியை அழித்துவிடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவர் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். இந்த பேட்டியின்போது காங்கிரஸ் வர்த்தக தலைவர் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story