மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச கணினி பயிற்சி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச கணினி பயிற்சி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 13 Sept 2017 2:00 AM IST (Updated: 13 Sept 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத் திறனாளிகளுக்கு நடத்தப்படும் இலவச கணினி பயிற்சியில் சேர தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தூத்துக்குடி,

மாற்றுத் திறனாளிகளுக்கு நடத்தப்படும் இலவச கணினி பயிற்சியில் சேர தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) வீரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

இலவச பயிற்சி

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஆங்கில பேச்சு பயிற்சி மற்றும் இலவச கணினி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் நடக்கும் இந்த பயிற்சியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதற்கு விருப்பம் உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களின் தேசிய அடையாள அட்டை, கல்வி சான்றிதழ்களுடன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதி

கண் பார்வையற்றவர்கள் மற்றும் கை, கால் பாதிக்கப்பட்ட பிளஸ்–2 முதல் முதுகலை பட்டம் வரை படித்த மாற்றுத் திறனாளிகள் கணினி பயிற்சி மற்றும் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதியானவர்கள். வேலைவாய்ப்பற்ற மேற்குறிய கல்வி தகுதியுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. கல்வி நிறுவனத்தில் தற்போது பயின்று வருபவர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story