மின்சார ரெயில் மோதி வட மாநில வாலிபர்கள் 2 பேர் பலி
சென்னை சேத்துப்பட்டு அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 வாலிபர்கள் நேற்று மின்சார ரெயில் மோதி பலியானார்கள்.
சென்னை,
சென்னை சேத்துப்பட்டு அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 வாலிபர்கள் நேற்று மின்சார ரெயில் மோதி பலியானார்கள். எழும்பூர் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் உயிரிழந்த வாலிபர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நவ்சத் பஸ்வான் (வயது 25) மற்றும் பல்வீர்குமார் (21) என்பது தெரியவந்தது. இருவரும் உறவினருக்கு ரெயிலில் இடம் பிடிப்பதற்காக வந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி பலியானது தெரியவந்தது.
Related Tags :
Next Story