கோயம்பேட்டில் துணிக்கடை ஊழியர்களிடம் பணம் பறித்த 3 பேர் கைது


கோயம்பேட்டில் துணிக்கடை ஊழியர்களிடம் பணம் பறித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Sept 2017 3:30 AM IST (Updated: 13 Sept 2017 12:49 AM IST)
t-max-icont-min-icon

கோயம்பேட்டில் துணிக்கடை ஊழியர்களிடம் கத்திமுனையில் பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்பேடு,

சென்னை தியாகராயநகரில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் ராமர், தாமஸ் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துணிக்கடையின் பணம் 3 லட்சத்தை எடுத்துக்கொண்டு கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் செலுத்துவதற்காக சென்றனர். கோயம்பேடு பூ மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் இருவரையும் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றது.

இதுதொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி திருடர்களை தேடி வந்தனர்.

3 பேர் கைது

இந்த நிலையில் கோயம்பேடு பஸ்நிலையத்தில் திருடர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், புது கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 27), சென்னை கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த குமரேசன் (35), முருகேசன் (44) ஆகியோரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story