விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் லாரிகளில் 9 டன்னுக்கு மேல் பாரம் ஏற்றக்கூடாது
விதிமுறைகளை கடை பிடிக்கும் வகையில் 9 டன்னுக்கு மேல் லாரிகளில் பாரம் ஏற்றக்கூடாது என்று லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
குன்னூர்,
குன்னூர் லாரி உரிமையாளர்கள் சங்க ஆண்டு பொதுக் குழு கூட்டம் குன்னூரில் நடைபெற்றது. இதற்கு கவுரவ தலைவர் முகமது தலைமை தாங்கினார். சங்க தலைவர் ஈஸ்வரன், செயலாளர் கணேஷமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆண்டு வரவு, செலவு கணக்குகளை சங்க பொருளாளர் ராஜேந்திரன் சமர்ப்பித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
அரசு அறிவித்த அசல் ஓட்டுனர் உரிமம் மற்றும் பதிவேடுகளை வைத்து லாரிகளை இயக்க ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்குவது.
9 டன்னுக்கு மேல் பாரம் ஏற்றக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. இந்த விதி முறைகளை கடைபிடிக்கும் வகையில் லாரிகளில் அதிக பாரம் ஏற்றக்கூடாது.
குன்னூர் லாரி உரிமையாளர் சங்க உறுப்பினர்களின் லாரிகளுக்கு தேயிலை பாரம் ஏற்றுவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற சாலை போக்குவரத்து சங்கத்தை கேட்டுக் கொள்வது.
உறுப்பினர்களின் லாரிகள் மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளில் உள்ள தேயிலை கிடங்குகளில் மாலை நேரத்தில் பாரம் ஏற்ற முடியாமல் போனால் அங்கு தங்குபவர்களுக்கு சம்மந்தப்பட்ட போக்குவரத்து சங்கங்கள் செலவுத்தொகையை வழங்க வேண்டும். மேட்டுப்பாளையம், காரமடையில் உள்ள தேயிலை கிடங்குகள் தற்போது மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. இதை இரவு 8 மணியாக மாற்ற வேண்டும். சங்க உறுப்பினர்கள் மரணம் அடைந்தால் சங்கம் மூலம் ரூ.10,000 மரண நிதி வழங்குவது என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் துணை தலைவர் வேல்முருகன், துணை செயலாளர்கள் பாலாஜி, சந்தரசேகர், சதீஷ்குமார் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story