சட்டமன்ற தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகி வருகிறோம் நிர்வாகிகள் கூட்டத்தில் தேவேகவுடா பேச்சு


சட்டமன்ற தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகி வருகிறோம் நிர்வாகிகள் கூட்டத்தில் தேவேகவுடா பேச்சு
x
தினத்தந்தி 13 Sept 2017 2:30 AM IST (Updated: 13 Sept 2017 1:42 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகி வருகிறோம் என்று தேவேகவுடா கூறினார்.

பெங்களூரு,

சட்டமன்ற தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகி வருகிறோம் என்று தேவேகவுடா கூறினார்.

நிர்வாகிகள் கூட்டம்

ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கலந்து கொண்டு பேசியதாவது:–

கர்நாடகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு நாம் முழுவீச்சில் தயாராகி வருகிறோம். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை கவனிக்க சுரேஷ்பாபு எம்.எல்.ஏ. தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்தி இருக்கிறோம். அதே போல் ஒன்றிய அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நமது கட்சி தொண்டர்கள் கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்க வேண்டும்.

சிறப்பு பார்வையாளர்கள்

ஒவ்வொரு தொகுதிக்கும் சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பார்வையாளர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை கட்சிக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நமது கட்சி சார்பில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடும் நிர்வாகிகளுக்கு டிக்கெட் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

அனைத்து சாதிகளை சேர்ந்தவர்களையும் சேர்த்து கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும். வரும் நாட்களில் ஓய்வு எடுக்காமல் கட்சி பணிகளை ஆற்ற அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு தேவேகவுடா பேசினார்.


Next Story