காஞ்சீபுரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி
காஞ்சீபுரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை அடுத்த ஆர்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் சுதாகர்(வயது 38). பிரவின் (34). இவர்களில் சுதாகர் விவசாயம் செய்து வந்தார். அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரத்தில் இருந்து ஓரிக்கை வழியாக ஆர்ப்பாக்கத்திற்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரவின் ஓட்டி சென்றார். பின்னால் சுதாகர் அமர்ந்து இருந்தார்.
ஓரிக்கை காந்திநகர் அருகே சென்றபோது காஞ்சீபுரத்தில் இருந்து உத்திரமேரூர் நோக்கி சென்ற ஒரு லாரி திடீரென அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சுதாகர் லாரியின் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பிரவின் எந்தவித காயமும் இன்றி உயிர்தப்பினார்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.