மும்பையில் ஆண்டுக்கு 3,500 குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் உயிரிழக்கின்றன


மும்பையில் ஆண்டுக்கு 3,500 குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் உயிரிழக்கின்றன
x
தினத்தந்தி 13 Sept 2017 3:33 AM IST (Updated: 13 Sept 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் ஆண்டுக்கு 3 ஆயிரத்து 500 குறைமாத குழந்தைகள் உயிரிழப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மும்பை,

மும்பையில் ஆண்டுக்கு 3 ஆயிரத்து 500 குறைமாத குழந்தைகள் உயிரிழப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

3,500 குழந்தைகள்

மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் கடந்த வெள்ளிக்கிழமை கற்பழிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு குறைமாத பிரசவ குழந்தை பிறந்தது. இந்த குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது. இந்தநிலையில் இந்தியாவில் குறை மாத பிரசவத்தில் பிறந்து உயிரிழந்த குழந்தைகளின் விவரம் வெளியாகி உள்ளது.

இதில், இந்தியாவில் ஆண்டுக்கு 35 லட்சம் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் உயிரிழப்பதாக கூறப்படுகிறது. ஒரு மாதத்திற்கு 3 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழக்கின்றன. இதில் மும்பை நகரில் மட்டும் ஆண்டுக்கு 3 ஆயிரத்து 500 குறைமாத பிரசவ குழந்தைகள் உயிரிழக்கின்றன.

உள்கட்டமைப்பு வசதி

இதுகுறித்து ஜே.ஜே. ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் கூறியதாவது:–

அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாததே குறைமாத குழந்தைகள் உயிரிழப்பிற்கு முக்கிய காரணம். மேலும் போதிய நர்சு மற்றும் டாக்டர்கள் இல்லாததும் காரணம் தான். இதேபோல பலர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றுவிட்டு அவர்கள் கைவிரித்த பிறகு கடைசி நேரத்தில் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். இதுவும் குழந்தைகள் இறப்பிற்கு காரணமாக உள்ளது. குழந்தைகள் இறப்பை தடுக்க ஆஸ்பத்திரிகளில் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் (என்.ஐ.சி.யு) எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story