கடலூரில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல்
கடலூரில் தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 750 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 750 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 8-வது ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும், அதுவரை 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், சிறப்புகாலமுறை, தொகுப்பு மற்றும் மதிப்பு ஊதியங்களை ஒழித்துவிட்டு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (ஜாக்டோ-ஜியோ) கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தடையை மீறி நேற்றும் மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் தலைமையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரண்டு நின்றனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேதரத்தினம் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நரசிம்மன், வெங்கடேசன், சிட்டிபாபு, சுந்தரவடிவேல் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் என ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதற்கிடையே தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் கோஷம் எழுப்பியபடி மறியல் செய்வதற்காக எதிரே உள்ள சாலையை நோக்கி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நடந்து சென்றனர். அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுக்க முயன்றனர். ஆனால் தடையை மீறி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சாலையின் குறுக்கே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பழைய கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.
பின்னர் தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 750 பேரை போலீசார் கைது செய்து மஞ்சக்குப்பம் டவுன்ஹால் மற்றும் திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர்.
தங்களின் போராட்டத்துக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் தொடர்ந்து இன்று(புதன்கிழமை) பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்த இருப்பதாக அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் 2 ஆயிரத்து 372 அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இதனால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. அரசு பள்ளிகளிலும் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு வராததால், மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாத நிலை காணப்பட்டது. இப்போராட்டத்தையொட்டி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story