இட ஒதுக்கீட்டில் தவறு நடந்திருந்தால் அதற்கு நிர்வாகமே பொறுப்பு நாராயணசாமி
இட ஒதுக்கீட்டில் தவறு நடந்திருந்தால் அதற்கு நிர்வாகமே பொறுப்பு, மாநில அரசு பொறுப்பேற்காது என நாராயணசாமி கூறிஉள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 778 மாணவர்களை வெளியேற்றுமாறு இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில் புதுச்சேரியில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் கடந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு சென்ற சேர்ந்த 778 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்து உள்ளது, மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் சுப்ரீம் கோர்ட்டின் வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
7 தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மாணவ சேர்க்கையானது நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையாகவும் நடந்தது என எந்தஒரு ஆதாரமும் காட்டப்படவில்லை என இந்திய மருத்துவ கவுன்சிலின் செப்டம்பர் 7-ம் தேதி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இட ஒதுக்கீட்டில் தவறு நடந்திருந்தால் அதற்கு நிர்வாகமே பொறுப்பு, மாநில அரசு பொறுப்பேற்காது என முதல்-மந்திரி நாராயணசாமி கூறிஉள்ளார்.
நிர்வாக இட ஒதுக்கீட்டில் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உரிமை உள்ளது. இட ஒதுக்கீட்டில் தவறு நடந்திருந்தால் அதற்கு நிர்வாகமே பொறுப்பு, மாநில அரசு பொறுப்பேற்காது. மருத்துவ இட ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக நிர்வாகத்தினரை அழைத்துப்பேச உள்ளோம் என கூறிஉள்ளார் நாராயணசாமி.
Related Tags :
Next Story