வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி,
வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;–
பயனாளிகள்வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் தங்களது தகுதியினை வளர்த்துக் கொள்ள தேவையான தொழில் பயிற்சி கட்டணம், போட்டி தேர்வு கட்டணம் போன்றவற்றை செலுத்திட உதவும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து பயனாளிகளின் ஆதார் எண் விவரங்களை அவர்களது வங்கி கணக்கு எண் விவரங்களோடு இணைக்க வேண்டும். பயனாளிகளின் பெயர் மற்றும் முகவரி, வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர் (கிளையுடன்) ஆதார் எண் ஆகியவற்றை உள்ளடக்கிய விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
25–ந் தேதிக்குள்...எனவே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்துவகை பயனாளிகளும் தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வேலைவாய்ப்பு அடையாள அட்டையின் நகல்களை தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 25–ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.