ஆட்சியை கலைக்க நினைக்கும் தினகரனை, ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது
ஆட்சியை கலைக்க நினைக்கும் தினகரனை, ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என தஞ்சையில் வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.
தஞ்சாவூர்,
சென்னையில் அ.தி.மு.க.(அம்மா-புரட்சி தலைவி அம்மா) சார்பில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு முதன் முறையாக நேற்று அவர் தஞ்சைக்கு வந்தார். பட்டாசுகளை வெடித்து நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து தஞ்சை ரெயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு வைத்திலிங்கம் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களை கொண்டு கூட்டம் நடந்துள்ளது. இதில் 98 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். பொதுக்குழு தீர்மானம் செல்லாது என தினகரன் அணியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்து இருப்பது பற்றி கேட்கிறீர்கள். பொதுக்குழுவில் யார், யார் பங்கேற்றார்கள் என வீடியோ எடுக்கப்பட்டு, அந்த வீடியோவை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம்.
அதை தேர்தல் ஆணையத்தினர் பார்த்துவிட்டு எங்களுக்கு சாதகமான முடிவை அறிவிப்பார்கள். எங்களிடம் உள்ள எம்.எல்.ஏ.க்களில் சிலிப்பர்செல் யாரும் இல்லை. ஆனால் தினகரனிடம் இருக்கக்கூடிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எங்கள் ஆதரவாளர்கள் தான். அவர்களை வெளியே விட்டால் அனைவரும் எங்களிடம் வந்து சேர்ந்துவிடுவார்கள். தமிழகத்தில் தற்போது ஜெயலலிதாவின் ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியை கலைக்க நினைக்கும் தினகரனை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பரசுராமன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சேகர், கோவிந்தராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், ஒன்றிய செயலாளர்கள் துரை.செந்தில், துரை.வீரணன், பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், காவிரி மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story