ஐமங்களா பகுதியில் பழுதாகி நின்ற லாரி மீது ஆம்னி பஸ் மோதியது; 2 பேர் பலி 4 பேர் படுகாயம்


ஐமங்களா பகுதியில் பழுதாகி நின்ற லாரி மீது ஆம்னி பஸ் மோதியது; 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 15 Sept 2017 2:00 AM IST (Updated: 15 Sept 2017 2:00 AM IST)
t-max-icont-min-icon

ஐமங்களா பகுதியில் பழுதாகி நின்ற லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிக்கமகளூரு,

ஐமங்களா பகுதியில் பழுதாகி நின்ற லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

2 பேர் பலி

கோவாவில் இருந்து பெங்களூரு நோக்கி நேற்று முன்தினம் இரவு ஒரு ஆம்னி பஸ் புறப்பட்டது. அந்த பஸ் நேற்று அதிகாலை சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா ஐமங்களா பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய பஸ், சாலையோரமாக பழுதாகி நின்ற லாரியின் பின்பகுதியில் பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 4 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்கள்.

இந்த விபத்து குறித்து அறிந்த ஐமங்களா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக இரியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை

இதனை தொடர்ந்து விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ராய்ச்சூரை சேர்ந்த பவார்லால்(வயது 43), சூரத்தை சேர்ந்த உமேஷ்(36) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஐமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story