திருச்சியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்ட விளக்க ஆயத்த கூட்டம்


திருச்சியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்ட விளக்க ஆயத்த கூட்டம்
x
தினத்தந்தி 15 Sept 2017 4:30 AM IST (Updated: 15 Sept 2017 2:05 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்ட விளக்க ஆயத்த கூட்டம் அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன் நடந்தது.

திருச்சி,

சம்பள உயர்விற்கான 13-வது ஊதிய மாற்ற ஒப்பந்தக்குழு அமைக்கவேண்டும், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட நிலுவை தொகைகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மே மாதம் 15-ந்தேதி அனைத்து அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர். அப்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் செப்டம்பர் மாதம் புதிய ஊதிய ஒப்பந்தகுழு அமைப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் புதிய ஒப்பந்தக்குழு இதுவரை அமைக்கப்படாததால் அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அரசுடன் 9 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வருகிற 24-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின்படி திருச்சி கண்டோன்மெண்ட் புறநகர் கிளை அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன் நேற்று போராட்ட விளக்க ஆயத்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். மத்திய சங்க தலைவர் குணசேகரன் (தொ.மு.ச), சிவானந்தம் (சி.ஐ.டி.யூ), சுப்ரமணியன் (ஏ.ஐ.டி.யூ.சி), செல்வம் (எச்.எம்.எஸ்), பெருமாள் (டி.டி.எஸ்.எப்), இமானுவேல் (ஏ.ஏ.எல்.எப்), அன்பழகன் (பி.டி.எஸ்), ரவிச்சந்திரன் (டி.எம்.டி.எஸ்.பி), செல்வராஜ் (எம்.எல்.எப்) மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கத்தை சேர்ந்த மருதமுத்து உள்பட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடக்கத்தில் கிளை செயலாளர் செல்வன் வரவேற்றார். முடிவில் செல்லமுத்து நன்றி கூறினார்.

Related Tags :
Next Story